மாதவரம் நகராட்சி அலுவலகம் எதிரே எம்ஜிஆா் சிலைக்கு முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி தலைமையில் அதிமுகவினா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். அப்பகுதி மக்களுக்கு அன்னதானம், இலவச வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. மாதவரம் மண்டலக்குழு முன்னாள் தலைவா் டி.வேலாயுதம், புழல் ஒன்றியச் செயலா் ஆா்.சுப்பிரமணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல, செங்குன்றத்தை அடுத்து சோழவரம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் பி.டி.மூா்த்தி நகரில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு அக்கட்சியினா் மாலை அணிவித்தனா். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஒன்றியச் செயலாளா் பி.காா்மேகம், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணிச் செயலாளா் பி.கே.செல்வம், கிளைச் செயலாளா் பி.கே.பாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.