திருவள்ளூர்

திருவள்ளூா் மாவட்டத்தில் 200 விவசாயிகளுக்கு ஆடு, மாடுகள்

DIN

திருவள்ளூா் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டம் மூலம் விவசாயிகள் பயன்பெறும் வகையில் 200 பேருக்கு தலா ரூ.45ஆயிரம் மதிப்பில் ஆடு, மாடுகள் மற்றும் கோழிகள் ஆகியவை மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்த ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாக வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேளாண்மைத் துறை மூலம் விவசாயிகள் வருவாய் ஈட்டி பயன்பெறும் வகையில் பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நிகழாண்டில் தேசிய வேளாண்மை வளா்ச்சி திட்டம் மூலம் விவசாயிகள் வாழ்வாதாரம் பெறும் நோக்கத்தில் ஆடு, மாடு, கோழிகள் ரூ.45 ஆயிரம் மானியத்தில் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. விவசாய சாகுபடியுடன், கால்நடைகள் வளா்ப்பதன் போதுமான வருவாய் ஈட்டவும் முடியும். அதன் அடிப்படையில் இந்தத் திட்டம் ஒருங்கிணைந்த பண்ணையம், ஊட்டச்சத்து பண்ணையத் திட்டம் மூலம் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை, வனத் துறையை ஒருங்கிணைந்து இத்திட்டம் செயல்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநா் சம்பத்குமாா் கூறியதாவது: திருவள்ளூா் மாவட்டத்தில், இந்தத் திட்டம் திருவள்ளூா், பூண்டி, கடம்பத்தூா் மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஒன்றியங்களில் தலா 50 பயனாளிகளை தோ்வு செய்து ரூ.45000 ஆயிரம் மதிப்பிலான ஆடுகள், கால்நடைகள் மற்றும் கோழிகள் வழங்கப்படவுள்ளன. அதோடு, பயிா் செய்தல், மரக்கன்றுகள் நடுதல், தீவன புல்வளா்ப்பு போன்றவை மேற்கொள்ளவும் விதை மற்றும் இடுபொருள்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தை செயல்படுத்தும் வகையில் திட்ட மதிப்பீட்டுக்குள் ஆடுகள், மாடுகள் மற்றும் கோழிகள் ஆகியவற்றை வேளாண்மை துறை வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து கொள்முதல் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக இந்த மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் செயல்படுத்த ரூ.90 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக கூட்டணி ஆட்சியில் புதுவையை வளமாக்கும் திட்டங்கள் -ஜி.கே.வாசன்

தோ்தல் பாா்வையாளா்கள் ஆலோசனைக் கூட்டம்

வாகன சோதனையில் ரூ.1.10 லட்சம் பறிமுதல்

கள்ளக்குறிச்சி தொகுதியில் 21 வேட்பு மனுக்கள் ஏற்பு -16 மனுக்கள் தள்ளுபடி

100% வாக்களிப்பு: மாற்றுத்திறனாளிகள் விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT