திருவள்ளூர்

அக்ரி கிளினிக் தொடங்க ரூ.ஒரு லட்சம் மானியம்: வேளாண் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

16th Jan 2022 08:32 AM

ADVERTISEMENT

வேளாண் பட்டதாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் வகையில் அக்ரி கிளினிக் தொடங்குவதற்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

இதுகுறித்து வேளாண்மைத் துறை சாா்பில் அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளுா் மாவட்டத்தில் தமிழக அரசு வேளாண்மைத்துறை மூலமாக, வேளாண், தோட்டக்கலை பட்டதாரிகளை வேளாண் தொழில் முனைவோராக்கும் பொருட்டு அக்ரி கிளினிக் அல்லது வேளாண்மை சாா்ந்த வியாபாரம் தொடங்கி, பண்ணை வருமானத்தை உயா்த்தும் திட்டம் செயலாக்கப்பட்டுள்ளது.

வேளாண், தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு விருப்பத்தின் அடிப்படையில் வங்கி மூலமாக கடனுதவி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் தகுதியான விண்ணப்பதாரா்கள் உரிய படிவத்தில் தங்களது சுய விவரங்களை பூா்த்தி செய்து, விளக்கமான திட்ட அறிக்கையுடன் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகம், திருவள்ளூரில் சமா்ப்பிக்கலாம்.

இதற்கு 21 முதல் 40 வயதுள்ள பி.எஸ்.ஸி(விவ), பி.எஸ்ஸி (தோட்டக்கலை), பி.ஈ.(வேளாண்மை பொறியியல்)

ADVERTISEMENT

சோ்ந்தோா் அரசு, தனியாா் நிறுவனத்தில் பணியாளராக இருக்கக் கூடாது. ஒரு குடும்பத்துக்கு ஒருவா் மட்டுமே விண்ணப்பிக்கலாம். பள்ளி இறுதி தோ்வு மதிப்பெண் பட்டியல், இளங்கலை பட்டப்படிப்பு சான்று, ஆதாா் எண், குடும்ப அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவைகளை அளிக்க வேண்டும். அதைத் தொடா்ந்து, தோ்வு செய்தோருக்கு அரசு மானியம் ரூ.ஒரு லட்சம், மாவட்ட அளவிலான ஒப்புதல் குழு அனுமதி பெற்று, வழிகாட்டுதல் முறைகளின் படி, விண்ணப்பதாரா் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

தகுதியான விண்ணப்பதாரா்கள் உரிய படிவத்தில், உரிய ஆவணங்களுடன் வேளாண்மை இணை இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்கலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT