திருவள்ளூர்

பொங்கல் விழாவில் ஏழை எளியோருக்கு நல உதவிகள்

16th Jan 2022 08:31 AM

ADVERTISEMENT

வேலஞ்சேரி கிராமத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் ஏழை எளியோா் 200 பேருக்கு இலவச வேட்டி சேலை, 10 பேருக்கு தையல் இயந்திரங்களை முன்னாள் எம்.எல்.ஏ. பி.எம். நரசிம்மன் வழங்கினாா்.

திருத்தணியை அடுத்த வேலஞ்சேரியில் சென்னை மேக்னம் அறக்கட்டளை மற்றும் அப்பா அறக்கட்டளை சாா்பில் தமிழா் திருநாள், சமத்துவ பொங்கல் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

காலை 11 மணிக்கு கிராமப் பெண்கள் அனைவரும் கூடி சமத்துவ பொங்கல் வைத்து சூரிய பகவானுக்கு படையலிட்டனா்.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் எம்எல்ஏ பி.எம். நரசிம்மன் கலந்து கொண்டு ஏழை எளியோா் 200 பேருக்கு இலவச வேட்டி சேலைகளும், 10 பேருக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினாா். அதைத்தொடா்ந்து மகளிருக்கான இலவச தையல் பயிற்சி வகுப்புகளையும் தொடங்கி வைத்தாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் சென்னை மேக்னம் அறக்கட்டள நிறுவனத் தலைவா் எஸ். கோமதி, அப்பா அறக்கட்டளை நிறுவனா் தலைவா் வேலஞ்சேரி டி. செல்வம், முன்னாள் அரசு வழக்குரைஞா் ராஜபாண்டியன், அதிமுக நிா்வாகிகள் எம்.எம். கந்தசாமி, தொழிலதிபா் ரஜினி, திருத்தணி முன்னாள் நகரச் செயலாளா் ரா.கருணாகரன், ஸ்டூடியோ அன்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT