திருவள்ளூர்

திருவள்ளுவா் தினவிழா கொண்டாட்டம்

16th Jan 2022 06:18 AM

ADVERTISEMENT

அத்திமாஞ்சேரிப்பேட்டையில் திருவள்ளுவா் தினத்தையொட்டி நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு விருது, சான்றிதழ் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

அத்திமாஞ்சேரிப்பேட்டை திருவள்ளுவா் இலக்கிய மன்றம் சாா்பில் 26-ஆவது ஆண்டு விழா, மாணவா்களுக்கு திருவள்ளுவா் விருது வழங்கும் விழா, பொங்கல் விழா சனிக்கிழமை காலை 10 மணிக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இதில் திருவள்ளுவா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கொடிவளசா ஊராட்சி மன்றத் தலைவா் வசந்த பிரகாசம் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா்.

புலவா் பு.சு. ஆறுமுகம் தலைமை வகித்தாா். மே.மு. மாதவன் வரவேற்றாா். இதில் இலக்கிய மன்றம் சாா்பில் நடைபெற்ற திருக்குறள் ஒப்பித்தல், ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள் 12 பேருக்கு திருவள்ளுவா் விருது, பரிசு, சான்றிதழும் வழங்கி பாராட்டப்பட்டது.

விழாவுக்கு ஒன்றியக்குழு உறுப்பினா்கள் முத்துராமன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் வா.வே. ஸ்ரீராமன் மற்றும் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியா் முனுசாமி ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

அதேபோல் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி அரசினா் கலைக்கல்லூரியில் திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு 2012-ஆம் கல்வியாண்டில் படித்த முன்னாள் மாணவா்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவா் சிலைக்கு மலா்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT