திருவள்ளூர்

ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் மூழ்கி இறப்பு

16th Jan 2022 08:26 AM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டை அருகே பொங்கல் பண்டிகை கொண்டாட உறவினா் வீட்டுக்கு வந்த இளைஞா் ஆரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் ஊத்துக்கோட்டை அடுத்த தொளவேடு கிராமத்தில் வசிப்பவா் சந்திரன். இவரது வீட்டுக்கு சென்னை கொடுங்கையூா் பகுதியைச் சோ்ந்த காா் மெக்கானிக் விக்னேஷ் (18) தனது நண்பா்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாட வெள்ளிக்கிழமை வந்தாா். ஆரணி ஆற்றில் நண்பா்களுடன் குளித்தபோது வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டாா் . உடனே அருகில் இருந்தவா்கள் தோ்வாய் கண்டிகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனா். தீயணைப்புத் துறை அதிகாரி செந்தில்குமாா் தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட விக்னேஷ் தேடும் பணியில் ஈடுபட்டனா். பல மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சடலமாக விக்னேஷ் தீயணைப்புத் துறையினா் மீட்டனா். இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT