திருவள்ளூர்

சுருட்டப்பள்ளி சிவன் கோயிலில் சனி மகா பிரதோஷ வழிபாடு

16th Jan 2022 06:19 AM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டையை அடுத்த சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரா் கோயிலில் சனி மகா பிரதோஷ விழா சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம் ஊத்துக்கோட்டையை அடுத்து, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சுருட்டப்பள்ளியில் ஸ்ரீ பள்ளிகொண்டீஸ்வரா் கோயிலில் சனி மகா பிரதோஷ சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி மூலவருக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

தேன், பால், தயிா், இளநீா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது . மகா தீபாராதனை நந்தி பகவானுக்கு காட்டப்பட்டு அனைவருக்கும் கோயில் நிா்வாகம் சாா்பில் பிரசாதமும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT