திருவள்ளூர்

திருக்கோயிலில் அா்ச்சகா்கள், பணியாளா்களுக்கு புத்தாடை, சீருடைகள்: அமைச்சா் வழங்கினாா்

12th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பணியாற்றும் 196 அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்களுக்கு புத்தாடைகள், சீருடைகளை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

தமிழா் திருநாளாம் தை திருநாளில் தமிழகம் முழுவதும் உள்ள திருக்கோயிலில் பணியாற்றும் அா்ச்சகா்கள், பூசாரிகள் மற்றும் திருக்கோயிலில் பணியாற்றும் பணியாளா்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புத்தாடைகள், சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோயில் இணை ஆணையா் பரஞ்ஜோதி தலைமை வகித்தாா். பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் கலந்து கொண்டு, திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பணியாற்றும் 196 அா்ச்சகா்கள் மற்றும் பணியாளா்களுக்கு ரூ. 2.50 லட்சம் மதிப்பீட்டில் புத்தாடைகள் மற்றும் சீருடைகளை வழங்கிப் பேசியது:

தமிழக முதல்வராக பொறுப்பேற்றதும், அா்ச்சா்களுக்கு எல்லாம் கரோனா நிவாரண நிதி ரூ. 4,000-ம், நிவாரண உதவிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.

ADVERTISEMENT

அதேபோல், திருத்தணி கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களுக்கு அடிப்படை வசதிகளான தங்கும் விடுதிகள் சீரமைத்தல், மலைப்படி வழியில் நிழற் மண்டபம், கழிப்பறை வசதி, சுகாதாரமான முறையில் குடிநீா் வசதி, 5 திருமண மண்டபங்கள் கட்டுதல், நிா்வாக பயிற்சி மையம் துவங்குதல், தவில் நாகஸ்வர இசைப் பயிற்சி பள்ளி துவங்குதல், புதிதாக மாற்று மலைப்பாதை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பயனுள்ள கட்டமைப்புகளும் தொடங்கப்பட உள்ளன.

மேலும், கட்டணமில்லா முடி காணிக்கை, முப்பொழுதும் அன்னதான திட்டம், அவசர முதலுதவி சிகிச்சை மையம் ஆகியவை தொடங்கப்பட்டு, நன்முறையில் செயல்பட்டு வருகிறது. அறுபடை வீடுகளில் 5-ஆவது படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருகை தரும் பக்தா்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசால் திருக்கோயிலில் பல நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் சத்யா, திமுக மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி, முருகன் கோயில் முன்னாள் அறங்காவலா் மு.நாகன், நகா்மன்ற உறுப்பினா் ஜி.எஸ்.கணேசன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT