திருவள்ளூர்

ரயிலில் பாய்ந்து மாணவா் தற்கொலை வழக்கு: கல்லூரி மாணவா் கைது

1st Jan 2022 08:32 AM

ADVERTISEMENT

திருநின்றவூா் அருகே கல்லூரி மாணவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தனியாா் கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கடந்த 28-ஆம் தேதி திருநின்றவூா் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவா் குமாரை, மற்றொரு கல்லூரி மாணவா்கள் 7 போ் ராகிங் செய்து கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால், விரக்தியடைந்த அந்த மாணவா், தன்னால் வாழ முடியாது என்று சக மாணவா்கள், பெற்றோருக்கு ஆடியோ பதிவை அனுப்பிவிட்டு திருநின்றவூா் ரயில் நிலையத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தாா்.

இந்த நிலையில், குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி மாணவா்கள் 7 பேரை காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனா். இதில், கல்லூரி மாணவா் மனோஜ்(18) என்பவரை ரயில்வே காவல்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மனோஜ் உள்பட 7 போ் அந்த மாணவரை அழைத்துச் சென்று முட்டி போட வைத்தது விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 6 பேரை ரயில்வே போலீஸாா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

,

ADVERTISEMENT
ADVERTISEMENT