திருவள்ளூர்

பறிமுதல் வாகனங்கள் பிப்.25 முதல் ஏலம்

17th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளுா் மாவட்டத்தில் போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் வருகிற 25-ஆம் தேதி முதல் ஏலம் விடப்பட உள்ளதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் மாவட்டக் காவல் நிலையங்களில் போலீஸாரால் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 319 இருசக்கர வாகனங்கள், 33 மூன்று சக்கர, 4 நான்கு சக்கர வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகம், ஆயுதப்படைப் பிரிவு மைதானத்தில் வருகிற 25, 26, 28 ஆகிய தேதிகளில் காலை 10 மணிக்கு ஏலம் விடப்பட உள்ளன.

இந்த வாகனங்களை ஏலம் எடுக்க வருவோா் முகக்கவசம் அணிந்து வருவதுடன், கரோனா தடுப்பூசி செலுத்தியிருப்பது அவசியம். முன்வைப்புத் தொகையாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.1000, நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 செலுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT