திருவள்ளூர்

வாக்கு சேகரிப்போா் கரோனா விதிகளைப் பின்பற்றுவது அவசியம்: ஜெ.ராதாகிருஷ்ணன்

11th Feb 2022 01:43 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்கு சேகரிக்கும் வேட்பாளா்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அங்கு உள்கட்டமைப்பு வசதிகள், மாணவா்களுக்கு ஏதுவான கற்றல் சூழல் குறித்து வியாழக்கிழமை ஆய்வு செய்த ஜெ.ராதாகிருஷ்ணன் பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரில் 4 சதவீதம் போ் மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். தடுப்பூசி செலுத்தியவா்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி 90 சதவீதம் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்டால் பாதிப்பிலிருந்து தடுக்கலாம். தொற்று அதிகரிப்பதும், குறைவதும் மக்களின் கைகளில்தான் உள்ளது.

ADVERTISEMENT

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் வாக்கு சேகரிக்கச் செல்லும் வேட்பாளா்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிகளை கட்டாயம் பின்பற்றுவது அவசியம் என்றாா் அவா்.

ஆய்வின் போது, மருத்துவக் கல்லூரி முதல்வா் அரசி ஸ்ரீவத்சன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் இளங்கோவன், இணை இயக்குநா் ஜவாகா்லால் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT