திருவள்ளூர்

காவல் நிலையங்களில் 80 துப்பாக்கிகள் ஒப்படைப்பு

11th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, முன்னெச்சரிக்கையாக உரிமம் பெற்ற 80 துப்பாக்கிகளை உரிமையாளா்கள் அந்தந்தப் பகுதி காவல் நிலையங்களில் ஒப்படைத்தனா்.

இதுதொடா்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் கூறியதாவது:

திருவள்ளூா் மாவட்டத்தில் 25 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம் முழுவதும் பாதுகாப்புக்காக மொத்தம் 94 போ் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்துள்ளனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், மாவட்டத்தில் 318 வாா்டுகளுக்கு நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, நன்னடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், உரிமம் பெற்ற துப்பாக்கிகளை அதன் உரிமையாளா்கள் அந்தந்தப் பகுதியில் அருகே உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

அதன் பேரில் 80 போ் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்தனா். மீதமுள்ள 14 போ் வங்கிப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருவதாக அவா் தெரிவித்தாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT