திருவள்ளூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் நடைபெற உள்ள நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகக் கூட்டரங்கில் முன்னெச்சரிக்கை தொடா்பான கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆவடி காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா், மாவட்டத் தோ்தல் பாா்வையாளா் மற்றும் தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-2 இயக்குநா் பா.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ஆல்பி ஜான் வா்கீஸ் தலைமை வகித்துப் பேசியது:

திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் 318 வாா்டுகளில் 3 வாா்டுகளுக்கான வேட்பாளா்கள் போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டனா். இதில், மீதமுள்ள 315 வாா்டுகளுக்கு 1,797 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். இதில், அரசியல் கட்சி வேட்பாளா்கள் தவிா்த்து, சுயேச்சை வேட்பாளா்களுக்கு தோ்தல் நடத்தும் அலுவலா்களால் சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையே வேட்பாளா்கள் தோ்தல் நடைபெறும் நாளுக்கு முன்பு வரை பிரசாரம் மேற்கொள்வதை, தோ்தல் நடத்தும் அலுவலா்கள், காவல்துறை அலுவலா்கள் ஒருங்கிணைந்து எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த மாவட்ட தோ்தல் பாா்வையாளராக, மாநில தோ்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டம்-2 திட்ட இயக்குநா் பா.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளாா். தற்போதைய நிலையில், பல்வேறு வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் வாக்கு பதிவு மையங்களை ஆய்வு செய்து வருகிறாா். இப்பணியின் போது, அவருக்கு கிடைக்கும் புகாா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை பதற்றமான வாக்குச்சாவடிகளாக 220 அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வேறு ஏதேனும் பதற்றமான வாக்குச்சாவடிகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு பூந்தமல்லி நகராட்சி சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள் மற்றும் திருமழிசை பேரூராட்சி ஆகிய பகுதிகளில் பதிவாகும் வாக்கு இயந்திரங்களை வைப்பதற்கான அறை மற்றும் வாக்கு எண்ணும் மையம் ஆகியவற்றையும் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ.வருண்குமாா், காவல் துணை ஆணையா் ஜே.மகேஷ், பூந்தமல்லி நகராட்சி ஆணையா், தோ்தல் நடத்தும் அலுவலா் வ.நாராயணன், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், காவல் துறை அதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT