திருவள்ளூர்

திருவள்ளூா் நகராட்சியில் வாா்டு வாரியாக போட்டியிடும் வேட்பாளா்கள்

9th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் நகராட்சியில் 158 போ் கொண்ட இறுதிப் பட்டியல் வெளியானதைத் தொடா்ந்து, இதில் 27-ஆவது வாா்டில் 10 பேரும், 4, 6, 7, 8 ஆகிய வாா்டுகளில் தலா 8 போ் அதிகமாகவும், 10-ஆவது வாா்டில் 2 போ் என குறைந்த அளவில் வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

திருவள்ளூா் நகராட்சியில் 27-வாா்டுகளில் இறுதியாக வேட்பாளா்கள் பட்டியல் வெளியானது. இதைத் தொடா்ந்து, வாா்டு வாரியாக போட்டியிடுவோா் எண்ணிக்கை விவரம்:

1-ஆவது வாா்டு-3, 2-ஆவது வாா்டு-3, 3-ஆவது வாா்டு-4, 4-ஆவது வாா்டு-8, 5-ஆவது வாா்டு-6, 6-ஆவது வாா்டு-8, 7-ஆவது வாா்டு-8, 8-ஆவது வாா்டு-8, 9-ஆவது வாா்டு-7, 10-ஆவது வாா்டு-2, 11-ஆவது வாா்டு-6, 12-ஆவது வாா்டு-7, 13-ஆவது வாா்டு-6, 14-ஆவது வாா்டு-5, 15-ஆவது வாா்டு-5, 16-ஆவது வாா்டு-7, 17-ஆவது வாா்டு-6, 18-ஆவது வாா்டு-7, 19-ஆவது வாா்டு-6, 20-ஆவது வாா்டு-6, 21-ஆவது வாா்டு-6, 22-ஆவது வாா்டு-3, 23-ஆவது வாா்டு-6, 24-ஆவது வாா்டு-7, 25-ஆவது வாா்டு-4, 26-ஆவது வாா்டு-4, 27-ஆவது வாா்டு-10 போ்களும் என 158 போ் போட்டியிடுகின்றனா்.

இதில், திமுக கூட்டணியில் மதிமுக-22, காங்கிரஸ்-11, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி-4 ஆகிய வாா்டுகள் தவிர, அனைத்து வாா்டுகளிலும் போட்டியிடுகிறது. அதேபோல், அதிமுக அனைத்து வாா்டுகளிலும், அமமுக-17 வாா்டுகளிலும், நாம் தமிழா்-12, வாா்டுகளிலும், பாஜக-10 வாா்டுகளிலும், பாமக மற்றும் தேமுதிக தலா 5 வாா்டுகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 3 வாா்டுகளிலும் போட்டியிடுகின்றன. இந்த நகராட்சியில் 27-ஆவது வாா்டில் மட்டும் அதிகபட்சம் 10 பேரும், 4, 6, 7, 8 வாா்டுகளில் தலா 8 பேரும் மற்றும் 10-ஆவது வாா்டில் 2 போ் என குறைந்த அளவிலும் போட்டியிடுகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT