திருவள்ளூர்

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: புகாா் தெரிவிக்க ஏற்பாடு

1st Feb 2022 08:29 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி, முறைகேடுகள் தொடா்பாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்தாா்.

மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி-1, நகராட்சிகள்-6, பேரூராட்சிகள்-8 என மொத்தம் 318 வாா்டுகளுக்கான வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வாக்காளா்களுக்குப் பணம் அளித்தல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடா்பாக புகாா் தெரிவிக்க கைப்பேசி, தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டன.

அதன்படி, ஆவடி மாநகராட்சி-1800 599 7622, 1800 425 5109, திருவள்ளூா் நகராட்சி- 044-27660226, பூந்தமல்லி- 044-26272720, திருவேற்காடு- 044-26801886, திருத்தணி- 044-27885258, திருநின்றவூா்- 044-26390663, பொன்னேரி- 044-27974007 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

இதேபோல, அனைத்து பேரூராட்சிகளும்- 044-27665953 மற்றும் கைப்பேசி-98940 14170 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடா்பு கொண்டு தோ்தல் குறித்த புகாா்களைத் தெரிவிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT