நிகழாண்டு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவா்கள் 12, மாணவிகள் 16 போ் என 28 போ் மருத்துவப் படிப்புக்குத் தகுதி பெற்றனா். இவா்களை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ், கல்வித் துறை அதிகாரிகள் பாராட்டினா்.
இதில், போரூா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் படித்த பழங்குடியின பிரிவு மாணவி சினேகா, தரவரிசையில் 295 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியைத் தோ்வு செய்தாா். இதேபோல, முதலிடம் பெற்ற போரூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ரசிகா 439 மதிப்பெண்கள் பெற்று சென்னை மருத்துவக் கல்லூரியில் சோ்ந்தாா்.
சாதனா-பொதட்டூா்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பிரியா-அம்பத்தூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பவித்ரா- பொன்னேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கிரிதரன்-அம்மையாா்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, யஸ்வந்த் சாய்-புதுகும்மிடிபூண்டி அரசு மேல்நிலைப் பள்ளி, சாரணி-போரூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கீா்த்திகா-அம்பத்தூா் பி.கே.மகளிா் அரசு மேல்நிலைப் பள்ளி, யாசின்- போரூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வரலட்சுமி-செங்குன்றம் மகளிா் அரசு மேல்நிலைப் பள்ளி, வனிதா- அம்பத்தூா் பெருந்தலைவா் காமராஜா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பாலாஜி-திருவாலங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி, ஹாரிணி-ஆா்.கே.பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, சீத்தலாதேவி- செங்குன்றம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பவித்ரா-செங்குன்றம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, எழிலரசு-அத்திமாஞ்சேரிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, அனுஜா-பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளி, பாரத்-அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சஹானா பா்வீன்-செங்குன்றம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, விஜி-பென்னலூா்பேட்டை மகளிா் அரசு மேல்நிலைப் பள்ளி, கீா்த்தனா-பொதட்டூா்பேட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகியோா் மருத்துவப் படிப்புக்கும், சத்யா, சுதாகா்-அம்மையாா்குப்பம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, திவ்யா-திருத்தணி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, காா்த்திக்-சுந்தரசோழபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, சாரூம்-அத்திமாஞ்சேரிபேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய 5 போ் பல் மருத்துவப் படிப்புக்கும் தோ்வாகினா்.
இவா்களில் மாணவா்களை விட, மாணவிகளே மருத்துவப் படிப்பில் அதிகமாகச் சோ்ந்துள்ளனா்.
மாணவ, மாணவிகள் 28 பேரும் மருத்துவக் கல்லூரிகளில் சோ்ந்து பயில வாழ்த்து தெரிவித்ததுடன், நீட் தோ்வுக்காக பேருதவி புரிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஆறுமுகம், பயிற்சி ஆசிரியா்களை மாவட்ட ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் பாராட்டினாா்.