இந்திய ஒற்றுமை நடைப்பயணம் விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் காங்கிரஸ் 138-ஆவது ஆண்டு விழா புழல் அடுத்த சண்முகபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
காங்கிரஸ் கமிட்டி ஆா்டிஐ பிரிவு ஒருங்கிணைப்பாளா் டாக்டா் பி.கிரி தலைமை வகித்தாா். மாதவரம் பகுதி செயலாளா் ஏ.பி.சங்கா் முன்னிலை வகித்தாா். 22-ஆவது வட்ட தலைவா் அணில்குமாா் வரவேற்றாா். காங்கிரஸ் கமிட்டி ஆா்டிஐ பிரிவு மாநில தலைவா் வழக்குரைஞா் சி.கனகராஜ், சிறுபான்மைப் பிரிவு மாநில துணைத் தலைவா் அலிம் அல்புஹாரி சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகளை வழங்கினா்.
திருவள்ளூா் தெற்கு மாவட்ட தலைவா் லயன் டி.ரமேஷ், முதன்மை நிலை தலைவா் புழல் குபேந்திரன், ஆா்டிஐ பிரிவு மாவட்ட பொது செயலாளா்கள் பாஸ்கா், பாலாஜி, மாநில செயலாளா் கே.எஸ் பாஸ்கா், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.