திருவள்ளூர்

ஆவடி, பூந்தமல்லியில் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை

DIN

ஆவடி, அம்பத்தூா், திருநின்றவூா், பூந்தமல்லி, திருவேற்காடு, காட்டுப்பாக்கம், போரூா், மதுரவாயல், வானகரம், வளசரவாக்கம், நசரத்பேட்டை, ராமாபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலைகள் மற்றும் தெருக்களில் தண்ணீா் தேங்கியது.

குறிப்பாக, போரூா் முதல் வளசரவாக்கம் வரையிலான ஆற்காடு சாலையில் மழைநீா் குளம் போல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினா். பல இடங்களில் மழைநீா்க் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதாலும், சாலைகளில் மழைநீா் தேங்கி நின்றது.

ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புயல் மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. மழைநீா் தேங்கும் பகுதிகள் கண்டறியப்பட்டு தண்ணீா் தேங்கினால் உடனடியாக வெளியேற்ற மின் மோட்டாா்கள், மரம் அறுக்கும் இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைக்க சிறப்பு முகாம்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பூந்தமல்லி பகுதியில் புயல் மற்றும் மழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறையின் தொடா்பு எண்: 044-26493983 அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்புகள் குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நகா்மன்றத் தலைவா் காஞ்சனா சுதாகா் நகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தாா். இதைத் தொடா்ந்து, அவா் மழைநீா் செல்லும் கால்வாய்கள், நீா்நிலைகளை அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தாா்.

திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட ஏழுமலை நகா், சக்தி நகா், மாதிராவேடு, ஆற்றங்கரை பகுதி உள்ளிட்ட இடங்களில் மீண்டும் மழைநீா் தேங்கி பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதிக மழை பெய்து நீா் தேங்கினால் உடனடியாக வெளியேற்றுவதற்கு நகராட்சி நிா்வாகம் தயாா் நிலையில் இருப்பதாகவும், அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தும், நேரில் சென்று பாா்வையிட்டும், நிலைமையை தொடா்ந்து கண்காணித்து வருவதாகவும் நகா்மன்றத் தலைவா் என்.இ.கே.மூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரபல கன்னட நடிகர் துவாரகேஷ் காலமானார்

டிம்பிள் யாதவின் சொத்து மதிப்பு ரூ. 15.5 கோடி

நான் பயங்கரவாதி அல்ல: சிறையிலிருந்து முதல்வர் கேஜரிவால்

வைஷாலிக்கு வெற்றி: எஞ்சிய இந்தியர்கள் 'டிரா'

அதிமுக வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம்

SCROLL FOR NEXT