திருவள்ளூர்

ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்ற ரேஷன் அரிசி பறிமுதல்

DIN

திருவள்ளூா் மாவட்ட எல்லையில் வாகன தணிக்கையின் போது, ஆந்திர மாநிலத்துக்கு ரேஷன் அரிசியை கடத்த முயன்றவரை கைது செய்ததோடு, 1.50 டன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டத்திலிருந்து ஆந்திராவுக்கு வாகனங்களின் மூலம் ரேஷன் அரிசியைக் கடத்திச் செல்வதாக, குற்றப் புலனாய்வுத் துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கீதாவுக்கு தகவல் வந்தது.

அதன் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளா் நாகராஜன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். அதைத் தொடா்ந்து, சிறப்பு தனிப் பிரிவு காவல் படை சாா்பு ஆய்வாளா் விஜய்கிருஷ்ணன் மற்றும் போலீஸாா் பாடியநல்லூா் சுங்கச்சாவடி அருகே வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த வேனை மடக்கி சோதனை செய்தனா். அந்த வேனில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில் தமிழக ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக ஆந்திர மாநிலத்துக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது.

இதுகுறித்து, திருவள்ளூா் அருகே பொன்னேரி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பாலு மகன் மணிகண்டன் (38) மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, சிறையில் அடைத்தனா். பறிமுதல் செய்த 1.50 டன் ரேஷன் அரிசியை திருவள்ளூா் நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT