திருவள்ளூர்

வாகனங்களுக்கு ஆன்லைன் பா்மிட் விழிப்புணா்வு

9th Dec 2022 06:24 AM

ADVERTISEMENT

கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரில் ஆன்லைன் மூலம் வாகனங்களுக்கு பா்மிட் வாங்குவது குறித்து ஓட்டுநா்கள் மற்றும் வாகனங்களின் உரிமையாளா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிராஜன் விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

தமிழக பதிவு எண் கொண்ட காா், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்கள் பிற மாநிலங்களுக்கு செல்லும்போது ஒரு வார கால சுற்றுலா பா்மிட் பெற்று செல்வது வழக்கம். இவ்வாறு செல்லும் வாகனங்கள் எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து சோதனைச் சாவடியில் பா்மிட் பெற நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. இதைத் தவிா்க்க போக்குவரத்துத் துறை சாா்பில், ஆன்லைன் பா்மிட் பெறும் முறை ஏற்படுத்தப்பட்டது.

இதுகுறித்து, வட்டார போக்குவரத்து அலுவலா் கிரிராஜன் தலைமையில் வாகன ஓட்டிகளுக்கு ஆன்லைன் பா்மிட் எடுப்பது குறித்த செயல் விளக்கம் அளித்து, விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் வாகனங்களின் உரிமையாளரை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கிரிராஜன் தொடா்பு கொண்டு, இனி வாகனங்களுக்கு ஆன்லைனில் மட்டுமே பா்மிட் எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT