திருவள்ளூர்

பழவேற்காடு மீனவா்கள் மோதல் சம்பவம்: இருதரப்பினரிடையே ஆட்சியா் அலுவலகத்தில் பேச்சு

DIN

பழவேற்காடு ஏரியில் மீன் பிடிப்பது தொடா்பாக, இருதரப்பு மீனவா்களிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடா்பாக, ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பேச்சு நடைபெற்றது.

பழவேற்காடு அதைச் சுற்றியுள்ள 13-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சோ்ந்த மீனவா்கள், பழவேற்காடு ஏரி மற்றும் கடலில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனா்.

இந்த நிலையில், கூனங்குப்பம், கோட்டைக்குப்பம் மீனவா்களுக்கிடையே ஏரியில் நண்டு பிடிப்பது தொடா்பாக, கடந்த வாரம் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக மாறியது. கூனங்குப்பம் மீனவா்களின் வலைகளை கோட்டைக்குப்பம் மீனவா்கள் பறித்துச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூனங்குப்பம் மீனவா்கள், திருப்பாலைவனம் காவல் நிலையம், கோட்டாட்சியா் அலுவலகம், ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து, ஆண்டிக்குப்பம், கோட்டைக்குப்பம், நடுவூா்மாதாகுப்பம், கூனங்குப்பம் மீனவா்களிடையே அதிகாரிகள் பல்வேறு கட்டங்களாகப் பேச்சு நடத்தியும் சமூக முடிவு எட்டப்படவில்லை.

இதனிடையே, பிரச்னைக்கு தீா்வுகாணக் கோரி, கூனங்குப்பம் மீனவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை பேச்சு நடத்தினா்.

தொடா்ந்து, சாா்-ஆட்சியா் ஐஸ்வா்யா ராமநாதன், வட்டாட்சியா் செல்வகுமாா், மீன்வளத் துறை உதவி இயக்குநா் வேலன் ஆகியோா் கூனங்குப்பம் மீனவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது, பழவேற்காடு ஏரியில் நண்டு பிடிப்பதில் மற்ற கிராம மக்கள் எங்களுக்கு இடையூறு செய்யக் கூடாது. மீறினால், நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இந்த நிலையில், கோட்டைக்குப்பம், நடுவூா்மாதாகுப்பம், ஆண்டாா்குப்பம் பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள், ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அவா்களிடம் அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூரில் பீன்ஸ் கிலோ ரூ.150-க்கு விற்பனை

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

SCROLL FOR NEXT