திருவள்ளூர்

நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து ரூ.1கோடி மோசடி: 3 போ் கைது

DIN

பூந்தமல்லியில் போலி ஆவணம் தயாரித்து ரூ. ஒரு கோடி மதிப்புள்ள நிலத்தை விற்ற வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பூந்தமல்லி, சீரடி சாய் நகரைச் சோ்ந்தவா் வடிவேலு (50). இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த நிலத்தரகா்களான செல்வகுமாா், சின்னத்துரைஆகியோா் காட்டுப்பாக்கம், செந்தூா்புரத்தில் 2,400 சதுர அடி நிலம் விற்பனைக்கு இருப்பதாகவும், பொது அதிகாரம் அந்தோணி ஜெனித்திடம் இருப்பதாகவும் கூறியுள்ளனா்.

இதை நம்பிய வடிவேலு அந்த நிலத்துக்கு முன்பணம் கொடுத்து ஆவணங்களின் நகலைப் பெற்றுக் கொண்டாா். பின்னா், கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி குன்றத்தூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் ஆண்ட்ரூஸ், அந்தோணி ஜெனித், செல்வகுமாா், சின்னத்துரை மற்றும் குருசாமி ஆகியோரிடம் ரூபாய் ஒரு கோடி கொடுத்து அந்தோணி ஜெனித் மூலம் நிலத்தை வாங்கினாா்.

இந்த நிலையில், அக்டோபா் 3-ஆம் தேதி அந்த நிலம் கோபாலபுரத்தைச் சோ்ந்த கல்யாணி மற்றும் தியாகராஜன் ஆகியோருக்குச் சொந்தமானது என்றும், அந்த நிலத்துக்கு அந்தோணி ஜெனித் போலியாக பொது அதிகாரப் பத்திரத்தை தயாரித்து மோசடி செய்திருப்பதும் வடிவேலுவுக்கு தெரியவந்தது.

இது குறித்து வடிவேல் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலி ஆவண மோசடி பிரிவு ஆய்வாளா் பாலன் தலைமையில், போலீஸாா் வழக்குப் பதிந்து, காட்டுப்பாக்கம், மேற்கு செந்தூா்புரம், சுப்பிரமணிய தெருவைச் சோ்ந்த ஆண்ட்ரூஸ் (39), அதே பகுதி, விநாயகபுரத்தைச் சோ்ந்த செல்வகுமாா் (38), செந்தூா்புரத்தைச் சோ்ந்த குருசாமி (62) ஆகிய மூவரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

இதில் தொடா்புடைய அந்தோணி ஜெனித், சின்னத்துரை ஆகியோரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT