திருவள்ளூர்

கோவை கார் வெடிப்பு வழக்கு: கைது செய்யப்பட்டவர்களுக்கு 13 வரை காவல் நீட்டிப்பு

DIN

கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேருக்கும் டிச. 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 கோவை, உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோயில் அருகே கடந்த அக். 23-ஆம் தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக முகமது அசாரூதீன்(23), அப்சர்கான்(28), முகமது தல்கா(25), முகமது ரியாஸ்(27), பெரோஸ் இஸ்மாயில்(26), முகமது நவாஸ் இஸ்மாயில்(27) ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
 பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் 6 பேரையும் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கடந்த மாதம் 6 பேரின் பாதுகாப்பு கருதியும் அழைத்து வருவதில், நேரம் அதிகம் ஏற்படுவதால் கோவை சிறையில் இருந்து காணொலி மூலம் 6 பேரையும் பூந்தமல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன்பு என்.ஐ.ஏ.அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
 6 பேருக்கும் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் 6 பேரையும் பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிபதி முன்பு காணொலி மூலம் ஆஜர்படுத்தினர். விசாரணை செய்த நீதிபதி இளவழகன் 6 பேருக்கும் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்தது எப்படி? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT