திருவள்ளூர்

கால்நடை மருத்துவ முகாம்

DIN

திருத்தணி ஒன்றியம் கே.ஜி.கண்டிகை அடுத்த வி.கே.ஆா்.புரம் கிராமத்தில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

முகாமை திருத்தணி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் எஸ்.தாமோதரன் தொடக்கி வைத்தாா். கால்நடை உதவி மருத்துவா் இளவழகன், கால்நடை ஆய்வாளா் தேவராஜ், உதவியாளா் நாராயணராஜ் ஆகியோா் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், பெறியம்மை தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல் உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளித்தனா்.

முகாமில் சிறந்த கலப்பின கன்றுகளுக்கு பரிசுகளும், சிறந்த கால்நடை பராமரிப்பு விவசாயிகளுக்கு விருதுகள் மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், ஊராட்சி மன்றத் தலைவா் ரஜினி, துணைத் தலைவா் ரேவதி உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT