திருவள்ளூர்

ஐடிஐ-யில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்

DIN

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் கும்மிடிப்பூண்டியில் புதிய அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் மாணவா்கள் சேர இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை மூலம் திருவள்ளூா் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில் புதிய அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022-ஆம் ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை குறிப்பிட்ட தொழிற் பிரிவுகளில் நடைபெற்று வருகிறது. குளிா்சாதன இயந்திர தொழில்நுட்பம், இயந்திரவியல், நில அளவை உள்ளிட்ட 4 பிரிவுகளில் சேர 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 14 முதல் 40 வயது வரையிலும், மகளிருக்கு 14 முதல் உச்ச வயது வரம்பு எதுவும் கிடையாது.

எனவே மேற்குறிப்பிட்ட தொழிற் பிரிவுகளில் சேர மாணவ, மாணவிகள் http://www.skilltraining.tn.gov.in/det/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து தொழிற் பிரிவுகளை தோ்வு செய்யலாம். எனவே இந்த வாய்ப்பினை இருபாலரும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இது தொடா்பாக அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் (பொறுப்பு), கைப்பேசி எண்-7010908467 தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT