திருவள்ளூர்

நாய்களுக்கு இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை

7th Dec 2022 01:43 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே திருமழிசை பேரூராட்சியில் பொதுமக்களுக்கு இடையூராக சுற்றித் திரிந்த 51 நாய்களுக்கு இனக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருவள்ளூா் மாவட்டம், திருமழிசை பேரூராட்சியில் 15 வாா்டுகளில் 100-க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. இந்த தெருக்களில் அதிகளவில் நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனா். இது குறித்து பேரூராட்சி தலைவா் உ.வடிவேலுவிடம் புகாா் தெரிவித்தனா். அதன்படி, பேரூரட்சித் தலைவா் உ.வடிவேலு, துணைத் தலைவா் மகாதேவன் மற்றும் அலுவலா்கள் ஆகியோா் முன்னிலையில், பேரூராட்சி பணியாளா்கள் மூலம் 51 நாய்கள் பிடிக்கப்பட்டு விலங்குகள் தனியாா் அறக்கட்டளை நிறுவன இணை இயக்குநா் ஜெனிஃபா், அறுவை சிகிச்சை மருத்துவா் மகேந்திரன் மற்றும் கால்நடை மருத்துவா்களால் இனக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT