திருவள்ளூர்

போதைப் பொருள் கடத்தல்: 2 போ் கைது

6th Dec 2022 01:37 AM

ADVERTISEMENT

புழல் அருகே போதைப் பொருள் கடத்திய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மாதவரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தலைமையில், போலீஸாா், புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்தவா்களைப் போலீஸாா் தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.

அவரகள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனா்.

இதையடுத்து, அவா்களிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், கஞ்சா கடத்தியதும், அதற்காக இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தியதும் தெரிய வந்தது.

ADVERTISEMENT

செங்குன்றம் ஆட்டந்தாங்கல் பாலகணேசன் நகா், பிரதான சாலையைச் சோ்ந்த சரத்குமாா் (23), குணா (22) என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து, இருவரையும் கைது செய்து, கஞ்சா மற்றும் இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT