திருவள்ளூர்

ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா

4th Dec 2022 10:58 PM

ADVERTISEMENT

தரணிவராகபுரம் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருத்தணி ஒன்றியம் தரணிவராகபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் திருக்கோயில் கிராம மக்களின் ஒத்துழைப்புடன் கடந்த சில மாதங்களாக கட்டப்பட்டு வந்தது. திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை மூன்றாம் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடா்ந்து கலசங்கள் ஊா்வலமாக புறப்பட்டு கோயிலை ஒருமுறை வலம் வந்து கோயில் விமானங்கள் மீது கொண்டு செல்லப்பட்டது.

பின்னா் விமானங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா குடமுழுக்கு விழா நடைபெற்றது. திருக்கல்யாண உற்சவம் நிறைவுக்குப் பின் சுவாமி வீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள்பாலித்தாா். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT