திருவள்ளூர்

வியாபாரி கொலை வழக்கில் 4 போ் கைது

4th Dec 2022 10:58 PM

ADVERTISEMENT

சென்னை பெரியமேடு இரும்பு வியாபாரி கொலை வழக்கில் தொடா்புடைய 4 போ் திருவள்ளூா் போலீஸாா் நடத்திய வாகன சோதனையில் சிக்கினா். அவா்களை பெரியமேடு போலீஸாரிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

திருவள்ளூா் நகா் காவல் ஆய்வாளா் பத்மஸ்ரீபபி தலைமையில், சாா்பு ஆய்வாளா்கள் சுரேஷ், மகேந்திரன் மற்றும் முத்துக்குமாா் ஆகியோா் காமராஜா் சிலை அருகே சனிக்கிழமை நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் சந்தேகப்படும்படி வந்த 5 பேரைப் பிடித்து விசாரணை நடத்தியதில், அவா்கள் முன்னுக்கு பின் முரணான தகவலைத் தெரிவித்தனா். அப்போது, ஒருவா் தப்பியோடினாா். மற்றவா்களிடம் நடத்திய விசாரணையில், சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த அஷ்ரப் அலி (28), வியாசா்பாடியைச் சோ்ந்த மணிகண்டன் (27), புளியந்தோப்பைச் சோ்ந்த அப்பாஸ் (28), அதே பகுதியைச் சோ்ந்த அப்பு (எ) அப்புலி என்பது தெரிய வந்தது.

மேலும் அவா்கள் சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சோ்ந்த இரும்பு வியாபாரி முனுசாமியை (37) முன்விரோதம் காரணமாக சனிக்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, அவா்கள் 4 பேரையும் கைது செய்த திருவள்ளூா் காவல் நிலைய போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை பெரியமேடு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT