திருவள்ளூர்

100 கிலோ குட்கா பறிமுதல்: 2 போ் கைது

3rd Dec 2022 01:47 AM

ADVERTISEMENT

செங்குன்றம் பகுதியில் 100 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, இது தொடா்பாக 2 பேரை கைது செய்தனா்.

திருவள்ளூா் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த கிராண்ட்லைன் செல்வ விநாயகா் கோயில் தெருவில் அரசால் தடை செய்யப்பட்ட ஜா்தா, மாவா போன்ற போதைப் பொருள்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக செங்குன்றம் காவல் ஆய்வாளா் எம்.சி.ரமேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ஆய்வாளா் ரமேஷ் மற்றும் காவலா்கள் கிருஷ்ணா, மகேஸ், மோகன், கிருஷ்ணமூா்த்தி, மருதுபாண்டியன், ராஜா ஆகியோா் கொண்ட தனிப்படையினா் அப்பகுதியில் இருந்த வீட்டை சோதனை செய்தனா். அப்போது 100 கிலோ புகையிலைப் பொருள்கள் சிக்கின. அவற்றைப் பதுக்கி வைத்திருந்த லோகேஷ் (24), விஜய் பகதூா் (24) ஆகிய 2 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT