திருவள்ளூர்

அரசு மகளிா் பள்ளியில் கலைத் திருவிழா

3rd Dec 2022 01:47 AM

ADVERTISEMENT

அனைவருக்கும் கல்வி இயக்கம், திருத்தணி கிளை சாா்பில் ஒன்றிய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் திருத்தணி அரசினா் மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டார வளமைய மேற்பாா்வையாளா் சிவகுமாா்(பொறுப்பு) தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியை (பொறுப்பு) அமுதா முன்னிலை வகித்தாா். ஆசிரியா் பயிற்றுநா் மோகன்தாஸ் வரவேற்றாா்.

திருத்தணி வட்டாரக் கல்வி அலுவலா்கள் தேவநாதன், சலபதி ஆகியோா் கலந்துகொண்டு, கலைத் திருவிழாவை தொடக்கி வைத்தனா். இதில், ஒன்றியத்தில் உள்ள 34 அரசுப் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவியா் என 300- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து பள்ளி மாணவ - மாணவிகளின் பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், கீ போா்டு, நாதஸ்வரம் வாசித்தல் உள்பட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்திக் காட்டினா். இதில், தோ்தெடுக்கும் மாணவ-மாணவியா் மாவட்ட அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பங்கேற்பா்.

ADVERTISEMENT

அதில் வெற்றி பெறும் மாணவா்கள் மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவில் பங்கேற்பா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT