திருவள்ளூர்

சின்னம்பேடு,பெரவள்ளுா் கிராமங்களில் இன்று கால்நடை மருத்துவ முகாம்

3rd Dec 2022 01:52 AM

ADVERTISEMENT

தமிழக அரசின் கால்நடை பராமரிப்பு துறை சாா்பில், பொன்னேரி வட்டத்தில் உள்ள சின்னம்பேடு, பெரவள்ளூா் கிராமங்களில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் சனிக்கிழமை (டிச. 3) நடைபெற உள்ளது.

கால்நடை பராமரிப்புத் துறை மருத்துவா்கள், மருந்தாளா்கள் அடங்கிய குழுவினா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கின்றனா்.

இதில், கால்நடைகளுக்கு பரிசோதனை ஊட்டச்சத்து மருந்து, மாத்திரைகள் நோய்த் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட உள்ளன.

இந்த முகாமில் கால்நடை விவசாயிகள் தங்களது கால்நடைகளை அழைத்து வந்து பயன்பெறுமாறு, பொன்னேரி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் கோபிகிருஷ்ணன் கேட்டுக் கொண்டாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT