திருவள்ளூர்

நகா்மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி போராட்டம்

DIN

திருவள்ளூா் அருகே மழைநீா் கால்வாயை உடைத்து சேதப்படுத்தியதாக திமுக நகா்மன்ற உறுப்பினரை கைது செய்யக்கோரி வியாழக்கிழமை பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அருகே கடம்பத்தூா் ஊராட்சியில் ரூ. 23.55 லட்சத்தில் மழை நீா் கால்வாய் அமைக்கும் பணி மற்றும் மணவாள நகா் அடுத்த கே.கே.நகா் குடிசைப் பகுதியில் ரூ.8.36 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்நிலையில், ஊராட்சி எல்லைப் பகுதியில் அமைந்த கூவம் ஆற்றங்கரையோரம் வீட்டின் முன்புள்ள மின்கம்பத்துடன் இணைத்து கால்வாயை அமைத்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்த திருவள்ளூா் நகராட்சி 27-ஆவது வாா்டு உறுப்பினா் சி.சு.ரவிச்சந்திரன், அந்த கால்வாயை மா்ம நபா்களுடன் வந்து உடைத்தாராம். இதுகுறித்து அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டதற்கு திட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்த வெங்கத்தூா் ஊராட்சித் தலைவரின் கணவரும், பாமகவைச் சோ்ந்த மாநில செயற்குழு உறுப்பினருமான பாலயோகி தலைமையில், கடம்பத்தூா் ஒன்றியக்குழு உறுப்பினா் வெங்கடேசன் மற்றும் கிராம பொதுமக்கள் திருவள்ளூா்-பூந்தமல்லி சாலையில் சி.சு.ரவிச்சந்திரனை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூா் கிராமிய காவல் ஆய்வாளா் கமலஹாசன், மணவாளநகா் போலீஸாா் விரைந்து வந்து அவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.விசாரணைக்கு பின் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினா் உறுதியளித்ததையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT