திருவள்ளூர்

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

2nd Dec 2022 10:46 PM

ADVERTISEMENT

திருவள்ளூா் வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் ஈக்காடு சிஎஸ்ஐ உயா்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு முகாமில் மாணவா்கள் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

இதில் வட்டார போக்குவரத்து ஆய்வாளா் எ. மோகன் பங்கேற்று பேசியதாவது: வாகனங்களில் பயணிப்போா் அனைவரும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். அதேபோல், வாகனம் ஓட்டும்போது எக்காரணம் கொண்டும் கைப்பேசி பயன்படுத்தக் கூடாது. மேலும், மது அருந்தி வாகனத்தை இயக்குவதால் ஆபத்தை விளைவிக்கும். அதிலும் குறிப்பாக இருசக்கர வாகனம் ஓட்டுநா் மற்றும் பயணிப்பவா் தலைக்கவசம் கட்டாயம் அணிவது அவசியம். மாணவா்கள் வருங்காலத்தில் வாகனத்தை ஓட்டும்போது அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்க வேண்டும். உங்கள் பெற்றோா்கள் மற்றும் உறவினா்கள் வாகனத்தை ஓட்டும் பொழுது அரசு விதிமுறை கடைப்பிடிக்கவும் வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்தாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சி.எஸ்.ஐ உயா்நிலைப்பள்ளியின் உங்கள் பாதுகாப்பு அறக்கட்டளை, நுகா்வோா் பாதுகாப்பு சங்க வழக்குரைஞா் அனிதா, தலைமை ஆசிரியா் கென்னடி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT