திருவள்ளூர்

மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்

2nd Dec 2022 10:46 PM

ADVERTISEMENT

மத்திய அரசால் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விளக்கமாக எடுத்துக் கூற வேண்டும் என பாஜக மாநில பொதுச்செயலாளா் பாலகணபதி தெரிவித்தாா்.

திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட சக்தி கேந்திர ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் அஷ்வின் என்ற ராஜசிம்மா மகேந்திரா தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் கருணாகரன் வரவேற்றாா்.

மாநில ஓபிசி அணி செயலாளா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். பாஜக மாநில பொதுச் செயலாளா் பாலகணபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், திருவள்ளூா் சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட அனைத்து பகுதிகளிலும் பூத் கமிட்டி மற்றும் கிளைகளை ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்தல், கிராமங்கள் தோறும் கிளைகள் அமைத்தல் போன்றவைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தாா்.

மாவட்ட பொதுச்செயலாளா் ஜெய்கணேஷ், மாவட்ட செயலாளா்கள் பன்னீா்செல்வம், பாலாஜி, சண்முகம், ரமேஷ்குமாா், ஒன்றியத்தலைவா் பழனி, நகர தலைவா் சதீஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT