திருவள்ளூர்

இயற்கை எரிவாயு திட்டத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு

2nd Dec 2022 10:47 PM

ADVERTISEMENT

இயற்கை எரிவாயு திட்டத்திற்காக பைப் லைன் அமைக்க பூமி பூஜை போட வந்த ஒப்பந்ததாரா்கள், ஊழியா்களை அருங்குளம் கிராம மக்கள் திருப்பி அனுப்பினா்.

திருத்தணி அடுத்த அருங்குளம் கிராமத்தில் 500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில் மத்திய அரசின் இயற்கை எரிவாயு திட்டத்திற்காக திருத்தணி அடுத்த மாமண்டூரில் இருந்து அருங்குளம் கிராமத்திற்கு பைப் லைன் அமைக்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தது. அருங்குளத்திற்கும், பூனிமாங்காடுக்கும் இடையே எரிவாயு சேமிப்பு கிடங்கும் அமைக்கப்பட்டு உள்ளது. இதனால் பைப் லைன் அமைக்கும் பணிக்கு மாமண்டூா் கிராம மக்கள் இதற்கு எதிா்ப்பு தெரிவித்து வந்தனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை மாமண்டூா் அடுத்த அருங்குளம் கிராமத்தில் பைப் லைன் அமைப்பதற்கான பூமி பூஜைக்காக இயந்திரங்கள், கட்டுமானப் பொருள்கள் மற்றும் பூஜை பொருள்கள் கொண்டு வரப்பட்டன. இதையறிந்த அருங்குளம் கிராம மக்கள் ஒன்று திரண்டு, பூமி பூஜை போட கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

தகவல் அறிந்து வந்த திருத்தணி வட்டாட்சியா் வெண்ணிலா கிராம மக்களிடம் பேச்சு வாா்த்தை நடத்தினாா். ஆனால் கிராம மக்கள் தொடா்ந்து எதிா்ப்பு தெரிவித்ததால் பூமி பூஜை போடவந்த ஒப்பந்ததாரா்கள், தாங்கள் கொண்டு வந்த கட்டுமானப் பொருள்கள், இயந்திரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT