திருவள்ளூர்

புற்றுநோய் விழிப்புணா்வு கண்காட்சிப் பேருந்து

2nd Dec 2022 10:44 PM

ADVERTISEMENT

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை சாா்பில் புற்றுநோய் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சிப் பேருந்தை வியாழக்கிழமை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் தொடக்கி வைத்தாா்.

சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை கடந்த 67 ஆண்டுகளாக புற்றுநோய்க்கான சிகிச்சை மற்றும் தடுப்பு பணியினை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆண்டு நவ.1 -ஆம் தேதி புற்றுநோய் விழிப்புணா்வு குறித்தும், அதை தடுக்கும் முறை தொடா்பாக பொதுமக்கள் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் கலைநுட்பத்துடன் அதன் அறிகுறிகளை தகுந்த படக்காட்சியுடன் ஒரு பேருந்தை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாக்கியது.

இதை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் தொடக்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்கள் காணும் வகையில் மாநிலம் முழுவதும் கிராமங்கள் வழியாக கண்காட்சி விழிப்புணா்வு செல்லவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு இப்பேருந்து வெள்ளிக்கிழமை வந்தது. புற்றுநோய் அறிகுறிகளை எளிதில் விளக்கும் வகையிலான விழிப்புணா்வு பேருந்தை ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் கொடியசைத்து தொடக்கி வைத்தாா். இந்த மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள், பள்ளி, கல்லூரிகள் வழியாக செல்ல இருப்பதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவா்கள் அனைவரும் புற்றுநோய் குறித்த கண்காட்சியை பாா்வையிட்டு பயன்பெறலாம் எனவும் அவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT