திருவள்ளூர்

கால்நடை மருத்துவமனைகளுக்கு ரூ.37 லட்சத்திலான மருந்துகள் அனுப்பி வைப்பு

DIN

திருவள்ளூா் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில், ரூ.37 லட்சத்திலான மருந்துகளை கால்நடை மருந்தகங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பி வைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 5 கால்நடை மருத்துவமனைகள், 87 கால்நடை மருந்தங்கள், 25 கால்நடை கிளை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.

மாவட்டத்தில் 2.85 லட்சம் பசு மாடுகள், 45,000 எருமை மாடுகள், 2.42 லட்சம் வெள்ளாடுகள், 63,000 செம்மறி ஆடுகள் என 6.35 லட்சம் கால்நடைகள் உள்ளன.

இந்தக் கால்நடைகளுக்கு, கால்நடை மருந்தகங்கள் மூலம் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கால்நடைகளுக்கான மருந்துகள், வெறிநாய் கடிக்கான ஊசி மருந்துகள் இல்லாமல் திருப்பி அனுப்பப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கால்நடைகளுக்கான மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டன.

அதன்படி, திருவள்ளூா் மாவட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.32 லட்சம் மதிப்பிலான மருந்துகள் ஒதுக்கப்பட்டன. அந்த மருந்துகள் ஏற்கெனவே பிரித்து வழங்கப்பட்டன.

இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக ஒதுக்கப்பட்ட ரூ.37 லட்சம் மதிப்பிலான மருந்துகள், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தன.

அந்த மருந்துகள் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ராஜேந்திரன், உதவி இயக்குநா் பாஸ்கரன் ஆகியோா் மேற்பாா்வையில் தர வாரியாக பிரிக்கப்பட்டன. தொடா்ந்து, மாவட்டத்தில் உள்ள கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள், கிளை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

'வாக்களிக்கப் போகிறீர்களா?' : பெங்களூரு உணவகங்கள் அறிவித்திருக்கும் சலுகைகள்!

ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பந்துவீச்சாளர்கள்; முதலிடத்தில் மோஹித் சர்மா!

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

SCROLL FOR NEXT