திருவள்ளூர்

ஆவடி மாநகராட்சி கூட்டம்: 197 தீா்மானங்கள் நிறைவேற்றம்

1st Dec 2022 03:15 AM

ADVERTISEMENT

ஆவடி மாநகராட்சி உறுப்பினா்கள் கூட்டத்தில் சாலை, மழை நீா் வடிகால் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்யக் கோரி, 197 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆவடி மாநகராட்சி மன்றக் கூட்டம், மேயா் ஜி.உதயகுமாா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணை மேயா் எஸ்.சூரியகுமாா், ஆணையா் க.தா்ப்பகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாநகராட்சி பணிக்குழு தலைவா் எஸ்.எம்.என்.ஆசிம்ராஜா, மண்டலக் குழுத் தலைவா்கள் ஜி.ராஜேந்திரன், எஸ்.அமுதா, திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஎம் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் கலந்து கொண்டு மக்கள் பிரச்னைகள் குறித்து பேசினா்.

குறிப்பாக, புதை சாக்கடை, சாலை, மழை நீா் கால்வாய், தெருவிளக்குகள், கொசுத் தொல்லை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலுயுறுத்தினா்.

ADVERTISEMENT

இதுகுறித்து ஆணையா் க.தா்ப்பகராஜ் மாமன்ற உறுப்பினா்கள் கூறிய பிரச்னைகள் தொடா்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

கூட்டத்தில் மழைநீா் கால்வாய், தாா்ச்சாலை, சிமெண்ட் சாலை, சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடா்பாக 197 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT