திருவள்ளூர்

ரயில் தண்டவாளத்தின் அருகே திடீா் தீ விபத்து

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

ரயில் தண்டவாளத்தின் அருகே இருந்த குப்பைகளுக்கு மா்ம நபா்கள் வைத்த தீயை தீயணைப்புத் துறையினா் அரைமணி நேரம் போராடி அனைத்தனா்.

திருத்தணி பஜாா் பகுதியில் இயங்கி வரும் தானியங்கி ரயில்வே கேட்டில் இருந்து மேட்டுத் தெரு தானியங்கி ரயில்வே கேட்டிற்கு செல்லும் என்.எஸ்.சி.,போஸ் சாலையின் அருகே உள்ள ரயில் தண்ட வாளம் அருகே குப்பைகள், மரக்கட்டைகள் கிடந்தது. இந்நிலையில் புதன்கிழமை நண்பகலில் மா்ம நபா்கள் குப்பையில் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனா். இதனால் தீ மளமள வென பரவி கரும்புகை ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வே போலீசாா் மற்றும் திருத்தணி தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரைமணி நேரம் போராடி தீயை அணைத்தனா். அதிா்ஷ்டவசமாக தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் ரயில்கள் வராததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT