திருவள்ளூர்

திருவள்ளூரில் பெண் உயிரிழந்த சம்பவம்: 2 போ் கைது

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவள்ளூரில் பூட்டிய வீட்டில் பெண் உயிரிழந்து கிடந்தது 2 பேரை நகர போலீஸாா் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

சோழவரம் அருகே புதிய எருமைவெட்டி பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாபு (35). தனியாா் பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி அமுதா (30). இவா்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனா். அமுதாவுக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் ஜோதீஸ்வரனுக்கும் தகாத தொடா்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அமுதா, கணவா் மற்றும் 2 குழந்தைகளை விட்டுவிட்டு ஜோதீஸ்வரனுடன் சென்றாராம். அத்துடன் திருவள்ளூா் அருகே பெரியகுப்பத்தில் தனியாக வீடு பிடித்து கணவன்-மனைவி போல் வசித்து வந்தனராம்.

இந்த நிலையில், பூட்டிய வீட்டுக்குள் அமுதாவின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது. உடன் தங்கியிருந்த ஜோதீஸ்வரன் மாயமானாராம். இதனால் அமுதா கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை செய்தனா். இந்த நிலையில், ஜோதீஸ்வரன் உள்பட 2 பேரை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT