திருவள்ளூர்

ஆவடியில் இலவச மருத்துவ முகாம்: அமைச்சர் நாசர் தொடக்கி வைத்தார்

31st Aug 2022 03:33 AM

ADVERTISEMENT

ஆவடியில் அரிமா சங்கம் சார்பில் நடந்த இலவச பொது மருத்துவ முகாமை பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடக்கி வைத்தார்.
 இதில், 1,200க்கு மேற்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.
 ஆவடி அரிமா சங்கமும், தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் இணைந்து கோயில்பதாகையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
 அரிமா சங்கத் தலைவர் இ.யுவராஜ் தலைமை வகித்தார். அரிமா சங்க நிர்வாகி ஏ.ஹென்றி மாரிஸ் அனைவரையும் வரவேற்றார். அமைச்சர் சா.மு.நாசர் மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார். முகாமில் 15 சிறப்பு மருத்துவர்கள் கொண்ட குழுவினர் பங்கேற்று பொது மருத்துவம், இருதயம், நீரழிவு, கண், பல், தோல், மகப்பேறு, எலும்பு முறிவு, ஆயுர்வேதம் மற்றும் சித்தா மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகளை அளித்தனர்.
 இதில், ஆவடி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த 1,200க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்று பயனடைந்தனர்.
 இவர்களுக்கு சுமார் ரூ.10 லட்சம் மதிப்பிலான மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன.
 நிகழ்வில் அரிமா சங்க நிர்வாகிகள் ரவீந்திரன், கஜேந்திரபாபு, ரவிச்சந்திரன், அண்ணாதுரை, மகேஷ், வருண் வாமணன், யோகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT