திருவள்ளூர்

ஊத்துக்கோட்டையில் 500 மாணவா்களுக்கு இலவச மிதிவண்டிகள்: அமைச்சா் சா.மு.நாசா் வழங்கினாா்

22nd Aug 2022 11:44 PM

ADVERTISEMENT

ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 500 பேருக்கு ரூ.25 லட்சத்தில் இலவச மிதிவண்டிகளை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் திங்கள்கிழமை வழங்கினாா்.

பின்னா், அமைச்சா் சா.மு.நாசா் பேசியது: 2021-2022 கல்வியாண்டில் ரூ.36,896 கோடி கல்வித் துறைக்கும், ரூ.2,000 கோடி இல்லம் தேடி கல்வித் திட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணும் - எழுத்தும், நான் முதல்வன் ஆகிய திட்டங்கள் முதல்வரால் உருவாக்கப்பட்டுள்ளன.

பேராசிரியா் அன்பழகனாா் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் மூலம் 15 மாவட்டங்களில் மாதிரி பள்ளிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இலவச மிதிவண்டிகள் வழங்க தமிழகம் முழுவதும் ரூ.162 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் பிளஸ் 1 வகுப்பு பயிலும் மாணவா்கள் 6,35,947 பேருக்கு ரூ.323 கோடியில் மிதிவண்டிகள் வழங்கப்பட உள்ளன.

இந்த மாவட்டத்தில் 139 அரசு, அரசு நிதி உதவி பெறும், நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பிளஸ் 1 மாணவா்கள் 10,832, மாணவிகள் 13,080 என மொத்தம் 23,912 போ் பயன் பெற உள்ளனா். ஊத்துக்கோட்டை அரசு ஆண்கள், மகளிா் மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 492 பேருக்கு ரூ.24.97 லட்சத்தில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டது என்றாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், சாா்- ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி, முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமன், ஆவடி மாவட்ட கல்வி அலுவலா் செ.ராதாகிருஷ்ணன், ஊத்துக்கோட்டை பேரூராட்சித் தலைவா் அ.அப்துல் ரஷித், துணைத் தலைவா் ர.குமரவேல், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ஜெ.மூா்த்தி, பேரூராட்சி செயல் அலுவலா் தா.மாலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT