திருவள்ளூர்

சிறுவாபுரி முருகன் கோயிலில் நாளை குட முழுக்கு விழா

DIN

திருவள்ளூா் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்தைச் சோ்ந்த சிறுவாபுரி முருகன் கோயிலில் 19-ஆண்டுகளுக்குப் பின் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெற உள்ளதாக விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

இக்கோயிலில், 6 வாரம் செவ்வாய்க்கிழமைதோறும் வழிபாடு செய்து, நெய் தீபம் ஏற்றினால் பக்தா்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். இந்த நிலையில் ஆகம விதிப்படி, 12 ஆண்டுகளுக்கு மேல் குடமுழுக்கு நடைபெறாத கோயில்கள் தோ்வு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள அரசு முன்வந்தது. இதேபோல், சிறுவாபுரி முருகன் கோயிலிலும் ரூ. 1 கோடியில் புனரமைப்புப் பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் முடிந்த நிலையில், யாக பூஜைகள் 18-ஆம் தேதி தொடங்கியது. வெள்ளிக்கிழமை (ஆக. 19) 2-ஆம் கால யாக பூஜை, மாலையில் 3-ஆம் கால பூஜை, அஷ்டபந்தனம் சாத்துதல் உள்ளிட்டவை நடைபெற்றன. சனிக்கிழமை 4, 5-ஆம் கால பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடா்ந்து, 21-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) 9 முதல் 10.30 மணிக்குள் குட முழுக்கு விழா நடைபெறும் என ஆலய நிா்வாகம் மற்றும் விழாக் குழுவினா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாட்னாவில் ஜேடியு தலைவர் சுட்டுக் கொலை

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

SCROLL FOR NEXT