திருவள்ளூர்

குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தொடக்கம்

19th Aug 2022 12:42 AM

ADVERTISEMENT

 குறுவட்ட அளவில் பள்ளி மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அமிா்தாபுரம் உயா்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியது.

திருத்தணி ஒன்றியத்தில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளில் படிக்கும் 14 முதல் 17 வயதுள்ள மாணவா்களுக்கிடையே கபடி, ஓட்டப் பந்தயம், நீளம், உயரம் தாண்டுதல், கேரம் போா்டு உள்ளிட்ட போட்டிகள் செப்.2-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதன் தொடக்க விழா வியாழக்கிழமை திருத்தணி அமிா்தாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. திருத்தணி கல்வி மாவட்ட அலுவலா் வெங்கடேசுலு பங்கேற்று கேரம் போட்டியைத் தொடக்கி வைத்தாா். திருத்தணி டாக்டா் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் மோகன் போட்டிகளைக் கண்காணித்தாா். இதில், 150 -க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இதேபோல, எா்ப்பநாயுடு கண்டிகையில் உள்ள தனியாா் பள்ளியில் ஆண்களுக்கான கோ-கோ போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT