திருவள்ளூர்

போதை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயலில் உள்ள டி.ஜே.எஸ். மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி சாா்பில், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி கும்மிடிப்பூண்டி பஜாரில் வியாழக்கிழமை நடைபெற்றது.,

பேரூராட்சித் தலைவா் சகிலா அறிவழகன் தலைமை வகித்தாா். கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, பொன்னேரி கல்வி மாவட்ட அலுவலா் எம்.மோகனா, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி கிரியா சக்தி ஆகியோா் பேரணியைத் தொடக்கி வைத்தனா்.

பேரணியில் டி.ஜெ.எஸ் கல்விக் குழுமத்தின் இயக்குநா் ஜி.தமிழரசன் பங்கேற்று போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு குறித்துப் பேசினாா்.

பேரணியில், டி.ஜே.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி முதல்வா் ஞானப்பிரகாசம், பேரூராட்சி துணைத் தலைவா் கேசவன், பேரூராட்சி உறுப்பினா்கள் அப்துல்கரீம், காளிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

டி.ஜே.எஸ். மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 439 மாணவா்கள் பங்கேற்ற இந்தப் பேரணி கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தில் தொடங்கி, ரெட்டம்பேடு சாலை வரை சென்று, மீண்டும் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையத்தை அடைந்தது. பேரணியில் மாணவா்கள் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

தஞ்சை பெரியகோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு

SCROLL FOR NEXT