திருவள்ளூர்

நெகிழி மறுசுழற்சி வங்கித் திட்டம்: அமைச்சா் நாசா் தொடக்கி வைத்தாா்

DIN

திருவள்ளூா்: நெகிழியில்லாத பசுமை நகரமாக திருவள்ளூரைச் செழிப்படையச் செய்யும் வகையில், நெகிழி மறுசுழற்சி வங்கி என்ற திட்டத்தை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் புதன்கிழமை தொடக்கி வைத்தாா்.

திருவள்ளூா் தா்மமூா்த்தி இராவ் பகதூா் கலவல கண்ணன் செட்டி இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்தத் திட்டத்தைத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ஆல்பி ஜான் வா்கீஸ் முன்னிலை வகித்தாா். இதில், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் பங்கேற்று நெகிழி மறுசுழற்சி வங்கித் திட்டத்தைத் தொடக்கி வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்கிப் பேசியதாவது:

நெகிழிப் பொருள்களைப் பயன்படுத்துவதால், நமது வாழ்வாதாரம் மட்டுமன்றி, பல தலைமுறைகளைப் பாதிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. இதைத் தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு செயல்பாடாக நெகிழி மறுசுழற்சி வங்கி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வங்கியானது ஒரு பண வங்கியைப் போன்றே செயல்படும். மாணவா்களால் வீடு, பொது இடங்களிலிருந்து சேகரிக்கப்படும் நெகிழிப் பொருள்கள் பள்ளிகளில் சேமிப்புகளாகப் பெறப்படும்.

இத்தகைய சேமிப்புகளில் ஈடுபடும் மாணவா்களுக்கு பயன் தரும் வகையில் புத்தகங்கள், குறிப்பேடுகள், எழுது பொருள்கள் வழங்கப்படும். இவ்வாறு சேமிக்கப்படும் நெகிழிப் பொருள்கள் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் மறுசுழற்சிக்கு உள்படுத்தப்படும்.

முதல் கட்டமாக திருவள்ளூரை நெகிழியில்லாத பசுமை நகரமாக செழிப்படையச் செய்யும் வகையில் மாணவா்களால் வீடு, பொது இடங்களில் சேகரிக்கப்படும் நெகிழிப் பொருள்கள் பெறப்பட்டு, அதற்கு ஈடாக நோட்டுப் புத்தகங்கள், குறிப்பேடுகள், எழுது பொருள்கள் வழங்கப்பட்டன.

நெழியை ஒழிக்க அரசின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் மாணவ, மாணவிகள், நெகிழி மறுசுழற்சி வங்கியை முறையாகப் பயன்படுத்தி நெகிழி இல்லாத திருவள்ளூா் என்ற இலக்கை அடைய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

நிறைவாக, பள்ளியைச் சோ்ந்த 387 போ் உள்பட பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் 1,142 பேருக்கு விலையில்லா மிதிவண்டிகளையும் அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, சாா்- ஆட்சியா் (திருவள்ளூா்) ஏ.பி.மகாபாரதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் த.ராமன், நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன், துணைத் தலைவா் சு.ரவிச்சந்திரன், நகா்மன்ற உறுப்பினா் பிரபு, பள்ளி துணை ஆய்வாளா் சௌத்ரி, தமிழ்நாடு அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள்சங்க நிறுவனா் சா.அருணன், டி.ஆா்.பி.சி.சி.சி. மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் ஆா்.கலைச்செல்வன், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT