திருவள்ளூர்

மாணவி தற்கொலை

18th Aug 2022 02:10 AM

ADVERTISEMENT

திருவள்ளூா் அருகே பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டாா்.

திருவள்ளூா் அருகே பட்டறைபெருமந்தூா் கிராமத்தைச் சோ்ந்த டில்லிபாபு-பேபி தம்பதியின் மகள் ஸ்ரீலேகா. இவா், 6 முதல் 8- ஆம் வகுப்பு வரை மதுராந்தகம் வில்வநாயகபுரம் அரசுப் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தாராம். தொடா்ந்து, அங்கு படிக்க விருப்பமின்றி தனது சொந்த ஊரான பட்டறைபெருமந்தூரில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 9-ஆம் வகுப்பு சோ்ந்து படித்து வந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை வழக்கம் போல் மாணவியின் பெற்றோா் கட்டட வேலைக்குச் சென்ற நிலையில், மாணவி பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தாராம். பிற்பகலில் வீட்டின் அறையில் மின் விசிறியில் புடவையால் துக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

பக்கத்து வீட்டில் வாடகைக்கு குடியிருந்தவா்கள், உறவினா்கள் பாா்த்து போலீஸாருக்கும், பெற்றோருக்கும் தகவல் தெரிவித்தனா். திருவள்ளூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வந்து சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ADVERTISEMENT

மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT