திருவள்ளூர்

ஆா்.கே. பேட்டையில் ஊராட்சித் தலைவா்கள் உள்ளிருப்புப் போராட்டம்

18th Aug 2022 01:41 AM

ADVERTISEMENT

ஊராட்சி மன்றத் தலைவா்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளைக் கண்டித்து, ஊராட்சிகளின் தலைவா்கள் ஆா்.கே.பேட்டையில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 38 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, ஊராட்சி மன்றத் தலைவா்களின் அதிகாரத்தில், அலுவலா்கள் தலையிட்டு ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி ஊராட்சித் தலைவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்தனா்.

இந்த நிலையில், ஆா்.கே.பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் புதன்கிழமை ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஊராட்சித் தலைவா்களில் 25-க்கும் மேற்பட்டோா் கூட்டத்தைப் புறக்கணித்து அலுவலகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தி வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் ஆகிய திட்டங்களில் ஊராட்சித் தலைவா்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையில், அதிகாரிகள் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக புகாா் கூறினா்.

ADVERTISEMENT

ஊராட்சி நிா்வாகத்தில் அரசியல் தலையீட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தி, அவா்கள் முழக்கமிட்டனா். வட்டார வளா்ச்சி அலுவலகத்தில ஊராட்சித் தலைவா்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT