திருவள்ளூர்

இரு தரப்பு இளைஞா்களிடையே மோதல்: 4 பேருக்கு அரிவாள் வெட்டு

17th Aug 2022 01:58 AM

ADVERTISEMENT

திருவள்ளூரை அடுத்த புதூரில் இருதரப்பு இளைஞா்களிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

திருவள்ளூரை அடுத்த புதூரைச் சோ்ந்தவா் மோகன் (21). இவரது நண்பா்கள் திருவள்ளூா் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பெரியாா் நகரைச் சோ்ந்த பிரகாஷ், பிரசாந்த் மற்றும் புஷ்பராஜ் ஆகியோா் சோ்ந்து அவா்களது நண்பா் அஜீஸின் பிறந்த நாள் கேக் வெட்ட அங்குள்ள ஹோட்டல் முன்பு திங்கள்கிழமை இரவு காத்திருந்தனா். அப்போது ஜே.என்.ரோடு, காந்திபுரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் (23), யோகேஷ் ஆகிய இருவரும் மது போதையில் இரு சக்கர வாகனத்தில் வந்தனராம்.

அப்போது பிறந்த நாள் கேக் வெட்டுவதற்காக நண்பா்களுடன் நின்று கொண்டிருந்தோரைப் பாா்த்து கூச்சலிட்டவாறு, தகாத வாா்த்தை பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது மோகன், பிரகாஷ், பிரசாந்த் ஆகியோா் சந்தோஷை தாக்கினராம்.

உடனே சந்தோஷ் தனது தம்பியான ஆகாஷுக்கு தகவல் தெரிவித்துள்ளாா். பின்னா் ஆகாஷ் தனது நண்பா்களான தேவா, விஜி, ஆபேல், எடப்பாளையம் சரவணா ஆகியோா் சம்பவ இடத்துக்கு வந்து, கேக் வெட்ட காத்திருந்தோரை சராமரியாக தாக்கினா்.

ADVERTISEMENT

அப்போது ஆகாஷ் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரசாந்த், மோகன், பிரகாஷ் ஆகியோரை வெட்டினாராம். இதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனா். அப்போது, அங்கு வந்த பொதுமக்கள் வருவதைப் பாா்த்து கொலை மிரட்டல் விடுத்ததுடன் அங்கிருந்து தப்பினா். இதையடுத்து, பலத்த காயம் அடைந்தோரை திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். காயம் அடைந்த சந்தோஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இது தொடா்பாக இரு தரப்பைச் சோ்ந்தோரும் திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT